கலையகம் அல் சபா வத்தேகெதரயில் கலைகள் யாவும் பயின்றிடுவோம்!
கலையகம் அல் சபா வத்தேகெதரயில் கலைகள் யாவும் பயின்றிடுவோம்!
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
கற்றவை என்றும் நிலைத்திடுமே!!
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
கற்றவை என்றும் நிலைத்திடுமே!!
"அல்லாஹு அல்லாஹு" அல்லாஹு அல்லாஹ் அல்லாஹு அல்லாஹு அல்லாஹு அல்லாஹ்"
ஏணிப்படியாய் ஏற்றும் தாயே
முதுமையிலும் நாம் உன்னை மறவோமே!!
உயிர்ப்பால் தந்த அன்னையின் பின்னே
அறப்பால் தந்து வளர்ப்பாயே!!
"அல்லாஹு அல்லாஹு அல்லாஹு அல்லாஹ் அல்லாஹு அல்லாஹு அல்லாஹு அல்லாஹ்"
ஆசிரியர் தம்வழி நடப்போம்
ஒழுக்க நெறியில் தடம் பதிப்போம்!!
உன்னுயர்வுக்காய் உழைத்திடுவோம்
உத்தமராய் நாம் விளங்கிடுவோம்!!
"அல்லாஹு அல்லாஹு அல்லாஹு அல்லாஹ் அல்லாஹு அல்லாஹு அல்லாஹு அல்லாஹ்"
பள்ளிப் பருவத்தில் கைக்கோர்த்திருந்து
வையகம் முழுதும் பெயர் பதிப்போம்
மண்ணகத்தில் எப் பதவி வகிப்பினும்
மமதைகள் கொண்டு நாம் அழையோம்
"அல்லாஹு அல்லாஹு அல்லாஹு அல்லாஹ் அல்லாஹு அல்லாஹு அல்லாஹு" அல்லாஹ்"
மேன்மை மிகுந்த ஏகன் நீயே
காட்டித் தருவாய் நல்வழி நீயே!!
காலம் முழுதும் எங்கள் மனதில்
உயர்ந்தே என்றும் நிலைத்திடுவாய்!!
"அல்லாஹு அல்லாஹு" அல்லாஹு" அல்லாஹ் அல்லாஹு அல்லாஹு அல்லாஹு அல்லாஹ்"








